×

ட்வீட் கார்னர்… ஆல் ரவுண்டர் சுனி கோஸ்வாமி!

இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன் சுனி கோஸ்வாமி (82 வயது) மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் நேற்று முன்தினம் காலமானார். 1962ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றதில் முக்கிய பங்களித்த சுனி கோஸ்வாமி, இந்திய கால்பந்து ரசிகர்களின் முதல் ஹீரோ என்றால் மிகையாகாது. பெங்கால் அணிக்காக முதல்தர கிரிக்கெட்டிலும் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், 1971-72 ரஞ்சி சீசனில் சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து, கிரிக்கெட் என இரண்டு விளையாட்டிலும் சிறந்த ஆல் ரவுண்டராக முத்திரை பதித்த கோஸ்வாமியின் மறைவுக்கு விளையாட்டு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்வதேச கால்பந்து நட்சத்திரம் பீலேவுடன் இணைந்து கோஸ்வாமி உற்சாகமாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.


Tags : Corner ,Suni Goswami ,All-rounder , Tweet Corner, All-rounder Suni Goswami!
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்கில்...